Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது 18 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் காஷ்மீர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காஷ்மீரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து, அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுள்ளது.
அமெரி்க்காவில் திருக்குரானை எரிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து காஷ்மீரில் பெரும் கலவரம் வெடித்தது.
இரண்டு கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகள், பல அரசாங்க கட்டடங்கள், இரு பொலிஸ் வாகனங்கள் ஆகியவற்றிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய கலவரத்தில் நேற்று பலியானவர்களுடன் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
51 minute ago
1 hours ago