2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

சென்னை துறைமுகத்தில் பாரிய தீ விபத்து

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை துறைமுகத்திலுள்ள பழைய எண்ணெய் கிடங்கொன்றினை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டபொழுது அக்கிடங்கு எதிர்பாராத விதமாக தீப்பற்றிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படுகின்ற மசகு எண்ணெய்களை சேமித்து வைக்கும் பாரிய கிடங்குகள் சென்னை துறைமுகத்தில் இருக்கின்றன. இதில் ஒரு பழைய கிடங்கினை திருத்துமுகமாக இன்று திங்கட்கிழமை வெல்டிங் வேலை பார்த்தபோது எதிர்பாராத விதமாக அக்கிடங்கு தீப்பற்றிக் கொண்டது. சடுதியாக பரவிய தீயினை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை. 10 வெவ்வேறு இடங்களிலிருந்து பெருமளவிலான தீயணைப்புப் படை வீரர்கள் சென்னை துறைமுகத்தில் பரவிய தீயினை கட்டுப்படுத்தும் பணியில் தற்சமயம் ஈடுபட்டிருக்கின்றனர்.

துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீயினால் வடசென்னை, கரும் புகைமூட்டத்தினால் சூழ்ந்து காணப்படுகிறது. பரவிய தீயினை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தீயணைப்பு படையினர் ஏனைய கிடங்குகளுக்கும் தீ பரவாமலிருக்க தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .