Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மற்றும் பலஸ்த்தீன தலைவர்கள் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர், வாஷிங்டனில் நேரடிப் பேச்சுவார்த்தையொன்றில் பங்குபற்றியுள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பலஸ்த்தீனத் தலைவர் முஹம்மத் அபாஸ் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரும் இரு வாரங்களில் மீண்டும் மத்திய கிழக்கில் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை முடிவுக்கு கொண்டுவருதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் எனக் கூறினார்.
இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு வருட காலக்கெடு வழங்கியிருந்த நிலையில், இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
32 minute ago
40 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
50 minute ago