2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

லிபிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது

Super User   / 2011 மார்ச் 24 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபிய விமானமொன்றறை பிரெஞ்சு போர் விமானமொன்று இன்று சுட்டுவீழ்த்தியுள்ளது.

விமானப் பறப்பு தடை வலயத்தை மீறி பறந்த லிபிய விமானமொன்று அழிக்கப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் விமான பறப்பு தடை வலயத்தை அமுல்படுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் ஆரம்பித்தபின்- லிபிய விமானமொன்று கூட்டுப்படைகளினால் சுட்டுவீழ்த்தப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

லிபியாவின் மேற்கு நகரான மிஸ்ரடாவுக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே லிபியாவின் இராணுவத் தளங்கள் பலவற்றின் மீது கூட்டுப்படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

கேணல் கடாபி தலைமையிலான லிபிய அரசாங்கத்தின் விமானப்படை இனிமேலும் தாக்குதல் நடத்தும் ஆற்றலுடன் இல்லையென பிரிட்டன் நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .