2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் இந்த மாதம் 28 ஆம் திகதி முதல்த் தடவையாக  கூடவுள்ளது.

அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையை பிரதமர் ஜூலியா கில்லார்ட்  பெற்றுள்ள நிலையிலேயே, அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல்த் தடவையாக நாடாளுமன்றம் கூடுகிறது.

இந்நிலையில், முதல் வாரத்தில் தொடர்ந்து 3 நாள்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், மேலும் 4 வார நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் 28 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளதாகக் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜூலியா கில்லார்ட்  தொழிற்கட்சி மாநாட்டில் தெரிவித்தார்.  தேர்தல் பெறுபேறுகள் குறித்து உன்னிப்பாக மீள்பார்வை செய்யப்படவுள்ளதுடன், கட்சியின் எதிர்கால இலக்குகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .