2021 மே 15, சனிக்கிழமை

ரஷ்யாவில் விமான விபத்து; 44 பேர் பலி

Super User   / 2011 ஜூன் 21 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்தொன்றினால் 44 பேர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'ரஷ்எயார்' எயார்லைன்ஸுக்குசொந்தமான இவ்விமானம் வடமேற்கு ரஷ்யாவில் மின்சார கம்பியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நேரப்படி இன்று செவ்வாய் அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவ்விமானத்தில் 9 விமான ஊழியர்கள் உட்பட 52 பேர் இருந்தனர்.

இவ்விபத்தில் 44 பலியானதாகவும் 8 பேர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டதாகவும் ரஷய் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசமான காலநிலை, விமானியின் தவறு அல்லது தொழில்நுட்பக் கோளாறு இவ்விமான விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ரஷ்ய விசாரணை அதிகாரியொருவர் கூறியுள்ளார். 


  Comments - 0

  • asker Tuesday, 21 June 2011 11:04 PM

    நம்ம தல தப்பினார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .