Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 ஜூன் 13 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் விசேட நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட 73 பால் மாதிரி வகைகளில், 14 பால் மாதிரிகளின் தரம் குறைவாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலூர் பகுதியிலுள்ள நிலையத்திலேயே, இந்தப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகளிலுள்ள பால் நுகர்வோருக்கு வழங்கப்படும் பால், தரமானதா என்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக, பால் விநியோகத்தர்களிடமிருந்து விநியோகிக்கப்படும் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன.
அவற்றுள், ஒரேயொரு மாதிரி மற்றும் பைக்கற்றுகளில் அடைக்கப்பட்டிருந்துள்ளன. பரிசோதிக்கப்பட்ட பால் மாதிரிகளில், இரசாயனக் கலவைகள் எவையும் இருக்காத போதும், தேவையான கொழுப்பின் நிலை மற்றும் திடக் கொடுப்பின் உள்ளடக்கம், குறைவாகவே இருந்துள்ளது.
மாட்டின் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, பாலில் நீர் கலந்திருக்கலாம் என்று, பரிசோதனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசோதிக்கப்பட்ட அனைத்துப் பால் மாதிரிகளும், கிண்டியிலுள்ள பரிசோதனை நிலையமொன்றுக்கு, மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பால் விநியோகிஸ்தர்களைக் கண்டுபிடிப்பதற்காக, பால் கொள்வனவு செய்பவர்களின் முகவரிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. பாலில், வேறு திரவத்தைச் சேர்த்தமைக்காக, பால் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தச் சோதனையிலும் தரக்குறைவு இருந்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து விநியோகிக்கப்படும் பாலினால், புற்றுநோய் ஏற்படுகின்றது என்று, பால் மேம்பாட்டு அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
22 minute ago
2 hours ago