Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 19 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சைலாசின் (xylazine) அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுகிறது. குறிப்பாக, பிலடெல்பியா நகரத்தில் இந்த சைலாசினால் பலர் பாதிக்கப்பட்டு ஜாம்பி போன்று வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர்.
இந்த சைலாசின் பவுடர் இதயத் துடிப்பைக் குறைத்து, உங்கள் சுவாச மண்டலத்தை மெதுவாக்குகிறது மற்றும் நரம்பு மண்டலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்க நேரிடலாம். இதனை உட்கொண்ட பிறகு நிமிர்ந்து நிற்கவோ அல்லது சரியாக நடக்கவோ முடியாது.
இந்த போதைப்பொருள் உடல் சருமங்களை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. இது தோலில் சீழ் வடியும் புண்களை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உறுப்பு துண்டிக்கப்படும் அளவுக்கு சென்றுவிடும் என்றும் இதற்கு மாற்றுமருந்தே கிடையாது எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளராகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே, பிலடெல்பியாவில் மக்கள் விசித்திரமாக தெருவில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பிலடெல்பியா நகரத்தில் சைலாசினால் அதிகரித்து வரும் அபாயம் குறித்து வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
51 minute ago
53 minute ago
1 hours ago