2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

‘அணு ஒப்பந்தம் காப்பாற்றப்படுமென நம்பிக்கை’

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அணுவாயுத ஒப்பந்தத்தம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் காப்பாற்றப்படுமென நம்புவதாக, ஈரான் வெளிநாட்டு அமைச்சு நேற்று (19) தெரிவித்தது.

குறித்த ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ள ஐக்கிய அமெரிக்கா, ஈரான் மீது தடைகளை விதித்துள்ள நிலையில், அவ்வொப்பந்தத்தின் எதிர்காலம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையிலேயே, இந்நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தடைகள் காரணமாக, ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கும் தடைகள் விதிக்கப்படுமென்பதால், இவ்வொப்பந்தம் தொடர்பில் இன்னமும் கேள்விகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X