2025 மே 17, சனிக்கிழமை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு  மேலும் 100 மில்லியன் டொலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பேரிழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு கடந்த  சில தினங்களுக்கு முன்னர்  85 மில்லியன் டொலர்களை அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்நிலையில் அண்மையில்  துருக்கியில் பயணம் மேற்கொண்ட பிளிங்கன், ஹெலிகொப்டரில் சென்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், ”துருக்கிக்கு  மேலும் 100 மில்லியன் டொலர்கள் உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”துருக்கியை போல நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னொரு நாடான சிரியாவுக்கு உதவி செய்வதில் சில தடைகள் இருப்பதாகவும், எனினும் மனிதாபிமான அடிப்படையிலான இந்த விவகாரத்துக்கு அந்த தடைகள் பொருந்தாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .