Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் கடந்த ஜனவரி 6-ம் திகதி பவர்பால் லாட்டரி சீட்டை வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 105,916,766,000) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. லாட்டரி நிறுவனத்தின் இணைய தளத்தில் சென்று அந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ்.
இதையடுத்து லாட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லாட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்துள்ளது.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், ஜான் சீக்ஸிடம், “உங்கள் எண்ணுக்கு லாட்டரி விழவில்லை. தவறுதலாக உங்கள் எண் குறிப்பிடப்பட்டுவிட்டது. உங்கள் லாட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள். இனி அது பயனற்றது” என்று கூறியுள்ளார்.
இதனால், ஜான் சீக்ஸ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது அந்த லாட்டரி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது குறித்து அவரது வழக்கறிஞர் கூறுகையில், “லாட்டரி நிறுவனத்தின் செயல்பாடு அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜான் சீக்ஸுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .