Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Mayu / 2024 மார்ச் 10 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் சூப்பர்மார்க்கெட்டில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் மூதாட்டி, கடையின் ஷட்டரில் மாட்டி அந்தரத்தில் தொங்கி காப்பாற்றப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள ரோண்டா சைனான் டாஃப் என்ற இடத்தில் பெஸ்ட் ஒன் என்ற சூப்பர்மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு தூய்மை பணியாளராக வேலை செய்பவர் 72 வயதாகும் அன்னா ஹியூஸ். இவர் கடை திறப்பதற்காக கடையில் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
இதற்கமைய, மின்சாரத்தினால் செயல்படும் கடையில் ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது அருகில் நின்று கொண்டு இருந்த மூதாட்டியின் ஆடை ஷட்டரில் மாட்டி அவரும் சேர்ந்து ஷட்டருடன் மேலே தூக்கப்பட்டார். பின்புறத்தில் இருந்து தூக்கப்பட்டதால், ஒரு நொடி பதற்றம் அடைந்த மூதாட்டி அருகில் இருந்த பொருட்களை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் ஷட்டர் முழுதாக திறக்கப்பட்டுவிட்டது.
அந்தரத்தில் தொங்கியப்படி சில நொடிகள் கடந்த நிலையில், கடையில் ஊழியர் ஒருவர் அவரை பார்த்து விரைந்து வந்து காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தில் சிறிது நேரம் அதிர்ச்சி அடைந்தாலும், மூதாட்டிக்கு எந்தவிதமாக காயமும் ஏற்படவில்லை என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
29 minute ago
38 minute ago