Freelancer / 2025 நவம்பர் 01 , மு.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படும் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி அமெரிக்காவில் முதல் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அந்த நாடு இதுவரை 1,054 அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது. கடைசியாக கடந்த 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்தியதில் பூமிக்கடியில் 2,300 அடி ஆழத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
இதர நாடுகளைவிட அமெரிக்காவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. எனது முதல் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் புதுப்பிக்கப்பட்டன. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு 33 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளேன். இதன்படி அமெரிக்காவில் விரைவில் அணு ஆயுத சோதனை தொடங்கும்.
அதிக அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2 ஆவது இடத்தில் ரஷ்யா, 3 ஆவது இடத்தில் சீனா உள்ளன. அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படும் என்பதை நன்கறிவேன். அணு ஆயுத சோதனைகளை நடத்த நான் விரும்பவில்லை. ஆனால் இதர நாடுகள் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் சூழலில் அமெரிக்காவிலும் அணு ஆயுத சோதனை நடத்த போர் துறையை அறிவுறுத்தி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .