Freelancer / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, 'தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு கசப்பான தோல்வியை சந்தித்துள்ளது. அதனை நியாயப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார்' என ஈரான் பதிலளித்துள்ளது.
ஈரானின் பிரஸ் டிவியில், கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தெரிவிக்கையில்,
தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானியப் படைகள் மேற்கொண்ட வீரமிக்க நடவடிக்கைகள், அமெரிக்க இராணுவத்தின் பலவீனத்தையும், அப்படைகளின் அவமானகரமான தோல்வியையும் வெளிப்படுத்துகின்றன. இந்த சூழலில், ட்ரம்ப் பொதுமக்களின் கருத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தனது பலவீனமான இராணுவத்தின் கசப்பான தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
இறைவனின் உதவியுடன், எங்கள் தேசத்தின் துணிச்சலான போராளிகள் எந்தவொரு ஆக்கிரமிப்பாளரையும் வெட்டி வீழ்த்தி, அவர்களை முற்றிலுமாக நசுக்குவார்கள் என்று நாங்கள் முன்னரே எச்சரித்திருந்தோம். தெற்கு இஸ்ஃபஹானில் ஈரானியப் படைகளின் தீர்க்கமான வெற்றி, இந்தத் துணிச்சலான நடவடிக்கைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும் என்று அவர் கூறினார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .