2026 மார்ச் 18, புதன்கிழமை

அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

Freelancer   / 2026 மார்ச் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையமான 'கிரீன் ஸோன்' பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏவுகணைகள் அல்லது ஆளில்லா விமானங்கள்  மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் உயிர்ச்சேதங்கள் அல்லது காயங்கள் குறித்த விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

தாக்குதலைத் தொடர்ந்து தூதரகப் பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், அங்குள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X