Freelancer / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கடந்த மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த நாட்டின் மேற்கு மாகாணங்களான வொஷிங்டன், பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில், வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர் வீசி பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், பனித்துகள்கள் வீதி மற்றும் ரயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில், வவொஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
அதிகப்பட்சமாக, பென்சில்வேனியாவின் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago