2025 மே 16, வெள்ளிக்கிழமை

அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ்

Freelancer   / 2023 ஜூன் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க நியூ ஜெர்சியில் உள்ள   இந்திய உணவகத்தில் மூவர்ண கொடி நிறத்திலான இட்லி உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் அடங்கிய 'மோடிஜி மீல்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21ல் அமெரிக்கா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்தில் ஜூன் 22ல் பங்கேற்கும் மோடி அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் மோடிஜி தாளி எனப்படும் மோடிஜி மீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மோடிஜி மீல்ஸ் பட்டியலில் மூவர்ண கொடி நிறத்தில் இட்லி கிச்சடி ரசகுல்லா சர்சன் கா சாக் காஷ்மீரி தம் ஆலு டோக்லா சாச் அப்பளம் உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .