Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் அமெஸொன் மழைக்காட்டில் ஏற்பட்டுள்ள வரலாற்று ரீதியான தீப்பரம்பல்களுடன் போராடுவதற்கு அப்பிராந்தியத்திலுள்ள ஒன்பது மாநிலங்களில் ஆறு, இராணுவ உதவியைக் கோரியுள்ள நிலையில் உத்தியோகபூர்வ தரவின்படி நூற்றுக்கணக்கான புதிய தீப்பரம்பல்கள் அங்கு தோன்றியுள்ளன.
இராணுவத்தின் உதவியை பரா, றொன்டோனியா, றொறைமா, டொகன்டிஸ், ஆக்ரே, மட்டோ குறொஸோ ஆகிய மாநிலங்கள் கோரியுள்ளதாக பிரேஸிலின் சுற்றுச்சூழல் அமைச்சர் மட்டோ குறொஸோ நேற்று அறிவித்துள்ளார்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்த நேற்று முன்தினம் பிரேஸில் ஜனாதிபதி ஜைர் பொல்ஸ்னராவ் அனுமதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரேஸிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவகத்தின் தரவுப்படி கடந்த வியாழக்கிழமைக்கும், வெள்ளிக்கிழமைக்குமிடையில் 1,663 புதிய தீப்பரம்பல்கள் கொழுந்து விட்டெரியத் தொடங்கியநிலையில், இதில் அமெஸொன் பிராந்தியத்தில் 1,200க்கும் மேலான தீப்பரம்பல்கள் காணப்படுகின்றன.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி பிரேஸிலில் இவ்வாண்டில் 78,383 காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ள நிலையில், இது கடந்தாண்டு எண்ணிக்கையை விட 84 சதவீதத்துக்கும் அதிகமான அதிகரிப்பு என்ற நிலையில், இதில் அரைவாசிக்கும் அதிகமானவை அமெஸொன் பிராந்தியத்தையே பாதித்துள்ளன.
மேய்ச்சல்நிலத்துக்காக நிலத்தை தயார்படுத்தும் விவசாயிகளே காட்டுத்தீ அதிகரிப்பு காரணமானவர்கள் என சுற்றுச்சூழலியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகிலுள்ள மிகப்பெரிய மழைக்காடு அமெஸொன் என்பதோடு, இதைப் பாதுகாப்பது, காலநிலைமாற்றத்துக்கெதிராகப் போராடுவதற்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. ஏனெனில், பாரியளவிலான காபனீரொட்சைட்டை அமெஸொன் உள்ளெடுக்கின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago