Editorial / 2019 மே 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிடகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு அளித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமென, கடந்த செப்டெம்பர் மாதம் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக, ஆளுநர் மாளிகையிலிருந்து எந்த பதிலும் வராத நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 7 மாதம் ஆகியும் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று முறையிட்டுள்ளார்.
நாளை, நளினியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக, தவவல்கள் வெளியாகியுள்ளன.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago