2025 நவம்பர் 05, புதன்கிழமை

அரசாங்க ஒப்பந்த விளிம்பில் ஜனநாயக, ஐந்து நட்சத்திர முன்னணி

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் முன்னாள் பிரதமர் ஜுசெப்பே கொன்டே இன்னொரு பதவிக்காலத்துக்கு பிரதமராக பதவி வகிப்பதை வீட்டோ செய்வதை கைவிடுவதாக சாரப்பட்ட இத்தாலியின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கருத்து தெரிவித்துள்ள நிலையில், புதிய இத்தாலிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின் விளிம்புக்கு ஆளும் ஐந்து நட்சத்திர முன்னணியும், ஜனநாயகக் கட்சியும் நேற்று  வந்துள்ளன.

எந்தவொரு கட்சியையும் ஜுசெப்பே கொன்டே சேராதபோதும், ஐந்து நட்சத்திர முன்னணிக்கும் நெருக்கமானவராகக் காணப்படுகின்றார்.

இந்நிலையில், தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடன் லீக் கட்சியுடனான, ஐந்து நட்சத்திர முன்னணியின் 14 மாத கூட்டணியானது, லீக் கட்சியின் தலைவர் மட்டியோ சல்வினி கூட்டணியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தகர்திருந்த நிலையில் தனது பிரதமர் பதவியிலிருந்து ஜுசெப்பே கொன்டே கடந்த வாரம் இராஜினாமா செய்திருந்தார்.

அந்தவகையிலேயே, ஜனநாயகக் கட்சியுடன் புதிய கூட்டணியொன்றை அமைப்பதன் மூலம் இடைத் தேர்தலொன்றை தவிர்ப்பதற்கான வாய்ப்பை ஐந்து நட்சத்திர முன்னணிக்கு இத்தாலியின் ஜனாதிபதி சேர்ஜியோ மட்டரெல்லா வழங்கியிருந்தார்.

இந்நிலையில், இன்று தனக்கு அறிக்கையிடுமாறு கடந்த வாரம் ஜனாதிபதி சேர்ஜியோ மட்டரெல்லோ தெரிவித்தபோதும், காலக்கெடுவை ஒரு நாளாக நாளையாக நேற்று  நீடித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X