2025 மே 05, திங்கட்கிழமை

அலைபேசியுடன் சைக்கிள் ஓட்டினால் சிறை

Freelancer   / 2024 நவம்பர் 03 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சைக்கிள் ஓட்டும்போது அலைபேசியில் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, ஜப்பான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் பின்னர், ஜப்பானில் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. அதேசமயம் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.

இதனால் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்தும் விதமாக, அந்நாட்டு அரசாங்கம் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளது.

இதுதவிர மதுபோதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X