2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அவுஸ்திரேலிய சூட்டுச் சம்பவத்துக்கு முன்னர் குண்டுகள் எறியப்பட்டன

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்துக்கு முன்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட குழாய் மற்றும் டென்னிஸ் பந்து குண்டுகள் சனத்திரளை நோக்கி எறியப்பட்டதாகவும், ஆனால் அவை வெடிக்கத் தவறியதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்ததாக இன்று வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

சில மாதங்களாக துப்பாக்கிதாரிகள் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், பொன்டி கடற்கரையோர பூங்காவுக்கு புலனாய்வுக்காக இரண்டு நாள்களுக்கு முன்னர் சென்றுள்ளனர்.

துப்பாக்கிதாரிகளான தந்தையும் மகனும் அவுஸ்திரேலியாவின் மிகவும் சனத்தொகைகூடிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸின் தனித்த கிராமப்புற பகுதியொன்றில் துப்பாக்கிகளுடன் பயிற்சி பெறும் புகைப்படங்களும் உள்ளடங்குகின்றன.

ஒரு துப்பாக்கிதாரியின் செல்லிடத்தொலைபேசியிலுள்ள ஒக்டோபரில் எடுக்கப்பட்ட காணொளியொன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் கொடியின் புகைப்படத்துக்கு முன்னால் அவர்கள் இருப்பதுடன், யூதர்களின் நடவடிக்கைகளை விமர்சிக்கையில் தாக்குதலுக்கான காரணங்களை அறிக்கைகளை அளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X