2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அவுஸ் பொன்டி யூதப் பண்டிகைத் தாக்குதலின் பின்னால் தந்தை, மகன்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பொன்டி கடற்கரையில் யூதக் கொண்டாட்டமொன்றின்போது 15 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரிகள் இருவரும் தந்தையொருவரும் மகனுமென பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 50 வயதான தந்தை கொல்லப்பட்டதுடன், 24 வயதான  அவரது மகன் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் இருப்பதாக பொலிஸார் செய்தியாளர் மாநாடொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து 40 பேர் இன்னும் வைத்தியசாலையில் காணப்படுகின்றனர்.

10 நிமிடங்கள் வரையில் தாக்குதல் நீடித்ததாக சம்பவத்தைக் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஹ்மட் அல் அஹ்மட் என்ற 43 வயதான பழக்கடை உரிமையாளரொருவர் ஆயுதந்தரித்த நபரொருவருடன் போராடி அவரிடமிருந்து ஆயுதத்தை பறித்தமை காணொளியில் பதிவாகியிருந்த நிலையில் அவர் இரண்டு தடவைகள் சுடப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய தந்தை 2015ஆம் ஆண்டு தொடக்கம் ஆயுத அனுமதியொன்றைக் கொண்டிருந்ததாகவும், சட்டபூர்வமான ஆறு ஆயுதங்களைக் கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X