2025 மே 19, திங்கட்கிழமை

ஆணுறுப்பில் குரங்கம்மை: ’ தீயில் இருப்பது போல் இருக்கும்’

Editorial   / 2022 ஜூலை 25 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது.

சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை அறிந்தார்.

ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரது முக்கிய பிரச்சினை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின.

"இது மிகவும் வலிக்கும்; அரிப்பு எடுக்கும்," என்று  அவர் கூறியுள்ளார். "எல்லா பாகங்களும் மிகவும் வீங்கியிருக்கிறது. சில சமயங்களில் அது தீயில் எரிவது போல் இருக்கும்."

பெரியம்மை பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸால்தான் குரங்கம்மையும் ஏற்படுகிறது, ஆனால் பெரியம்மை மிகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. இது குரங்கு, எலி அல்லது அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும்.

மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அப்படி ஏற்படலாம்.

தோலில் கீறல், சுவாசக்குழாய், கண்கள் மற்றும் வாய் வழியாக இந்த தொற்று பரவுகிறது.

குரங்கம்மை பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை அல்லது துண்டுகளைத் தொடுவதும் நோய் பரவும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X