2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆபத்தான நிலையில் டெல்லி வளி

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களின் பண்டிகையாள தீபாவளியின் ஓர் அங்கமாக, பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வளியின் நிலைமை, மோசமானதாக மாறியுள்ளது.

மாசமடைவு தொடர்பாக, இந்திய மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுட்டிகள், “மிக மோசம்”, “பாரதூரமானது” ஆகிய நிலைகளை வெளிப்படுத்தின. இப்படியான நிலைமையில், நீண்ட நேரம் அவ்வளியைச் சுவாசித்தால், சுவாச நோய்கள் ஏற்படும்.

புதுடெல்லியின் வளி காரணமாக, பாதிப்பில்லாத பட்டாசுகளே, இரண்டு மணித்தியாலங்களுக்குக் கொளுத்தப்பட முடியுமென, உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்வுத்தரவு மதிக்கப்பட்டிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X