Editorial / 2018 நவம்பர் 02 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில், இராணுவ ஹெலிகொப்டரொன்று நேற்று முன்தினம் (31) வீழ்ந்ததில், அதில் பயணஞ்செய்த 25 பேர் கொல்லப்பட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்களில், முக்கியமான தளபதியொருவரும் மாகாண சபையொன்றின் தவிசாளரும் உள்ளடங்குகின்றனர் என, அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்துக்கெதிராகப் போராடிவரும் ஆயுதக்குழுவான தலிபான், தாமே அதைச் சுட்டுவீழ்த்தியதாக உரிமை கோரியது. இராணுவத் தரப்பு, இவ்விடயம் தொடர்பில் உறுதியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
இராணுவ ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஃபாரா மாகாணத்திலிருந்து ஹேரட் மாகாணத்துக்குச் சென்றுகொண்டிருந்த போது, அதிலொன்று, கட்டுப்பாட்டை இழந்து, மலையொன்றின் மீது மோதியது என, மாகாண ஆளுநரின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதில் உயிரிழந்தோரில், இராணுவத் தளபதி, மாகாண சபையின் தவிசாளர் ஆகியோரைத் தவிர ஏனையோர், இராணுவத்தினரும் மாகாண சபை உறுப்பினர்களும் என, அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஃபாரா மாகாணத்திலுள்ள பக்தவார் நகரம், அரச படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான முக்கியமான மய்யமாக உள்ளது.
இவ்வாண்டு மே மாதத்தில், அந்நகரத்தைச் சுற்றிவளைத்திருந்த தலிபான் ஆயுததாரிகள், அந்நகரத்தைக் கைப்பற்றப் போவதாக எச்சரித்திருந்தனர்.
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago