Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரஃப் கானிக்கான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடக்கான பர்வான் மாகாணத்தில் இடம்பெற்ற பிரச்சாரப் பேரணி ஒன்றிலும், காபூலிலும் நேற்று இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் தலிபான் தற்கொலைக் குண்டுதாரிகள் குறைந்தது 48 பேரைக் கொன்றதுடன், 80 பேரைக் காயமடையச் செய்துள்ளனர்.
தனது ஆதரவாளர்களிடையே ஜனாதிபதி அஷ்ரஃப் கானி உரையாற்றுகையில், பேரணியை நோக்கிச் செல்லும் வழியிலமைந்த சோதனைச் சாவடியொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரொருவர் தற்கொலைக் குண்டொன்றை வெடிக்க வைத்து முதலாவது தாக்குதல் இடம்பெற்ற நிலையில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், 42 பேர் காயமடைந்திருந்தனர்.
பின்னர், ஐக்கிய அமெரிக்க தூதரகத்துக்கருகே மத்திய காபூலை அதிகரித்த தலிபானால் உரிமை கோரப்பட்ட இன்னொரு குண்டுவெடிப்பு மேற்கூறப்பட்ட முதலாவது தாக்குதல் இடம்பெற்று ஒரு மணித்தியாலத்துக்குப் பின்னர் இடம்பெற்றிருந்தது. முன்னதாக பாதிப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் வழங்கியிருக்காதபோதும் பின்னர் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
முன்னைய தலிபான் குண்டுவெடிப்பொன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களுடனான பேச்சுக்களை இம்மாத ஆரம்பத்தில் திடீரென ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்திய பின்னரே இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களுக்கும் உரிமை கோரும் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையொன்றில், ஜனாதிபதி அஷ்ரஃப் கானியின் பேரணிக்கு அருகில் நடாத்தப்பட்ட தாக்குதலானது இம்மாதம் 28ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வேண்டும் என்று குழப்பும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டதாக தலிபானின் பேச்சாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் தெரிவித்துள்ளார்.
2 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
25 minute ago