Editorial / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் ஆப்கானிஸ்தானுக்கான தலைவர் அபு சாட் எர்ஹாபி, கடந்த சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என, ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். நங்கர்ஹர் என்ற பகுதியிலுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் மறைவிடங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் படைகளும் வெளிநாட்டுப் படைகளும் இணைந்தே, இத்தாக்குதல்களை மேற்கொண்டன எனவும், அபு சாட் தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவைச் சேர்ந்த மேலும் 10 ஆயுததாரிகளும் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் எனவும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் பணியகப் பிரிவு குறிப்பிட்டது.
இரண்டு மறைவிடங்கள் இலக்குவைக்கப்பட்டன எனவும், கொல்லப்பட்ட ஆயுததாரிகளுக்கு மேலதிகமாக, கனரக, சிறியரக ஆயுதங்கள் என, ஏராளமான ஆயதங்களும் இதன்போது அழிக்கப்பட்டன எனவும், பணியகம் தெரிவித்தது.
கடந்தாண்டு ஜூலைக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் 4ஆவது தலைவர் இவர் என, அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
43 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
4 hours ago