2026 மே 14, வியாழக்கிழமை

ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் சீன மருத்துவத்தால் கவலை

Freelancer   / 2022 ஜனவரி 29 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல ஆப்பிரிக்க நாடுகளில் பாரம்பரிய சீன மருந்து தயாரிப்புகளின் பயன்பாடு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகவும் சில சேர்மானப் பொருட்களை தயாரிப்பதற்கு அருகி வரும் உயிரினங்களில் உடற்பாகங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சுற்றுச்சூழல் புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன கமியூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷீ ஜின்பிங்கின் பட்டுப் பாதை உலகளாவிய இணைப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்காவில் பாரம்பரிய சீன மருந்து தயாரிப்புகளின் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை சீன அரசாங்கம் அதிகரித்து வருகிறது.

ஆபிரிக்கக் கண்டம் முழுவதும் பாரம்பரிய சீன மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் கிளினிக்குகளின் சங்கிலிகள் காணப்படுவதாக சுற்றுச்சூழல் புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக  ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவிக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பில் தன்னார்வப் பணிபுரிந்த ஹொங்கொங் எழுத்தாளரும் ஆர்வலருமான ரிக்கி உயெடா இவ்விடயத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாரம்பரிய சீன மருத்துவத்துக்கான தேவை அதிகரிக்கும் என்றும் இந்த விலங்குகளின் மீதான அழுத்தம் நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் 394 காண்டா மிருகங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்காவின் விவசாயம், வனவியல் மற்றும் மீன்வள அமைச்சின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தூளாக்கப்பட்ட காண்டாமிருக கொம்பின் சட்டவிரோத வர்த்தகம்  நூதனமான முறையில் இடம்பெறுவதாகவும் கொம்பை தூளாக அரைத்து கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பும் முன்னர், மணிகள் அல்லது பிற பொருட்களாக மாற்றப்படுவதாகவும் ரேடியோ ஃப்ரீ ஏசியா தெரிவிக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .