Editorial / 2019 மே 23 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால், தேசிய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான திரோங் அபோ உள்ளிட்ட 11 பேர், கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலின் போது, திரோங் அபோவின் குடும்ப உறுப்பினர்கள் நால்வரும், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும், 4 ஆதரவாளர்களுமே, உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்துக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தவர்களை, திரப் மாவட்டம், போகபானி கிராமம் அருகில் வைத்து மறித்த ஆயுததாரிகள், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, சம்பவ இடத்திலேயே, 11 பேரும் உயிரிழந்தனர். எனினும், காயமடைந்த அதிகாரியொருவர், அசாமின் திப்ருகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தத் தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது குறித்து, இதுவரையில் தெரியவில்லை என்றும் என்.எஸ்.சி.என் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சரும் மேகாலய மாநில முதலமைச்சரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக, பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சு தலையிட்டு, துரித விசாரணை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
அருணாச்சல்ப பிரதேசத்தில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், மேற்கு கோன்சா தொகுதியில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான அபோ, மீண்டும் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று (23), வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அபோ, சுட்டுக்கொல்லப்பட்டமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago