Editorial / 2019 மே 10 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில், ஆரம்பகட்ட முடிவுகளின்படி ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும், வெள்ளையின சிறுபான்மை ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் முதற்தடவையாக 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
26.8 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளில், இலங்கை நேரப்படி நேற்று (09) பிற்பகல் 2.30 மணி வரையில் நான்கு மில்லியனுக்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 55 சதவீதமான வாக்குகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கொண்டிருப்பதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஏறத்தாழ 26 சதவீதமான வாக்குகளையும், இடதுசாரிக்கொள்கைகளுடைய பொருளாதார சுதந்திரப் போராளிகள் கட்சி ஏறத்தாழ ஒன்பது சதவீதமான வாக்குகளையும் பெற்றிருந்தன.
புதிய நாடாளுமன்றம், ஒன்பது மாகாண சபைகளுக்கும் தென்னாபிரிக்கர்கள் வாக்களித்திருந்த நிலையில், மோசடி, உயர் வேலையில்லாவீதம், இனப் பாகுபாடு ஆகியன முக்கிய விடயங்களாக இருந்தன.
இந்நிலையில், ஆரம்பகட்ட முடிவுகளின்படி, இறுதி வாக்களிப்பில் 56 சதவீதம் தொடக்கம் 59 சதவீதமான வாக்குகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெறும் என நியூஸ்24 இணையத்தளம் எதிர்வுகூறியுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago