Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி, குடியரசுத்தலைவர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் 6 மாநிலங்களில் பதவி வகிக்கும் ஆளுநர்களை இடமாற்றம் செய்து, குடியரசுத்தலைவர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய பிரதேசம் மாநில ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளுநராக இருந்த கேஷரி நாத் திரிபாதி மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஜகதீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜகதீப் தன்கர் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தவர் ஆவார்.
பீகாரின் ஆளுநராக இருந்த லால் ஜி டண்டான், மத்தியப்பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் புதிய ஆளுநராக பேகு சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகலாந்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, திரிபுரா மாநிலத்தில் புதிய ஆளுநராக ரமேஷ் பய்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ரமேஷ் பய்ஸ், பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago