Janu / 2025 நவம்பர் 05 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயதான சகோதரி கர்ப்பமான நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன், தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாகத் தெரியவந்துள்ளது.
சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது, சகோதரிக்கு 18 வயதாகிய நிலையிலேயே இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாலியல் உறவுக்கு உடன் பிறந்த சகோதரன் எதிர்ப்பு தெரிவித்த போதும், கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் மிரட்டிய சகோதரி தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 22 வயதான குறித்த பெண்ணின் வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
20 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
52 minute ago
1 hours ago