2025 மே 16, வெள்ளிக்கிழமை

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

J.A. George   / 2023 ஜூன் 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வொஷிங்டனில் இசை நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இசை நிகழ்ச்சி நடைபெற்ற பூங்காவுக்குள் நுழைந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .