2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

’இட்லிப்புக்கு மேலும் அதிக துருக்கிப் படைகள்’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் இட்லிப் பிராந்தியத்துக்கு, மேலும் அதிக துருக்கிப் படைகளை அனுப்புவதற்கு, துருக்கி முடிவுசெய்துள்ளது. இட்லிப் தொடர்பில், துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவானுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்தே, இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரு ஜனாதிபதிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், இட்லிப்பில், "இராணுவ சூனியப் பிரதேசங்களை" உருவாக்குவதற்குச் சம்மதிக்கப்பட்டது. இப்பகுதியிலிருந்து, "தீவிரவாத" ஆயுதக்குழுக்கள் வெளியேற வேண்டுமென, இரு ஜனாதிபதிகளும் அறிவித்திருந்தனர்.

சிரியாவில் முக்கியமான தாக்கத்தைக் கொண்டுள்ள இரு ஜனாதிபதிகளுக்குமிடையில் ஏற்பட்ட இந்த இணக்கப்பாடு காரணமாக, இட்லிப்பில் உடனடியாக, பாரிய மோதல் ஏற்படும் ஆபத்து இல்லாமல் போயுள்ளது எனக் கருதப்படுகிறது.

இந்நிலையிலேயே, ஏற்கெனவே இட்லிப்பில் காணப்படும் துருக்கிப் படைகளுக்கு மேலதிகமாக, மேலதிக படைகளை அனுப்பவுள்ளதாக, துருக்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, இட்லிப் தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டை, சிரிய அரசாங்கம் வரவேற்றுள்ளத. ஆனால், சிரியாவின் "ஒவ்வோர் அங்குலத்தையும்" மீளக் கைப்பற்றுவதற்கான தமது முயற்சிகள் தொடருமெனவும், அது அறிவித்துள்ளது. எனவே, இட்லிப் மீதான தாக்குதல்களை, எவ்வளவு காலத்துக்கு அவ்வரசாங்கம் பிற்போடுமென்பது, கேள்விக்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X