Editorial / 2019 மே 06 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய துணைக்கண்டத்தை ஐந்தாண்டுகளில் தாக்கிய பலமான சூறாவளியான ஃபனி சூறாவளியானது, இந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் பயங்கர அழிவை ஏற்படுத்தி விட்டு பங்களாதேஷுக்குள் தற்போது சென்றுள்ளது.
இந்திய உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி குறைந்தது 16 பேர் இந்தியாவில் நேற்று முன்தினம் வரையில் இறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதில் பெரும்பாலானோர் சூறாவளி ஃபனி தாக்கிய ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஆவர்.
இந்நிலையில், இந்தியாவின் அயல் நாடான பங்களாதேஷின் வடகிழக்காக ஃபனி சூறாவளி நகருகின்ற நிலையில் குறைந்தது 12 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், மத்திய பங்களாதேஷிலுள்ள கிகிஷோர்கஞ் மாவட்டத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலிலிருந்து கடும் மழையும், காற்றும் இருப்பதாக உதவி ஆணயாளர் சர்வார் முர்ஷெட் செளத்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரங்களான வீடொன்றின் மீது மரமொன்று வீழ்ந்ததில் வயதான பெண்ணொருவரும், அவரது பேரனும் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று மணியளவில் இறந்ததாக பர்குனா மாவட்டத்தின் உதவி ஆணையாளர் கபீர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒடிஷா மாநிலத்திலும் பாரியளவானோர் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தரையிறங்கியதைத் தொடர்ந்து, தனது வலுவை இழந்திருந்த ஃபனி சூறாவளி உயர் தாழமுக்கமாக இந்திய வானினை திணைக்களமாக குறைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பங்களாதேஷுக்குள் சென்றிருந்தது.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago