Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 20 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்துக்கு நான்தான் காரணம் என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக ‘இரு நாட்டு தலைவர்களே போர் நிறுத்தத்துக்கு காரணம். இதில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீர், ட்ரம்பை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்குப் பிறகு ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரான், இஸ்ரேல் போர் மற்றும் இந்தியா உடனான போர் நிறுத்தம் குறித்த கேள்விகளுக்கு ட்ரம்ப் பதிலளிக்கையில்,
பாகிஸ்தான் இராணுவ தளபதிக்கு ஈரான் விவகாரம் பற்றி நன்றாகத் தெரியும். இஸ்ரேல், ஈரான் போர் பற்றி அவர் மகிழ்ச்சியடையவில்லை. பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிரான நாடு அல்ல. அவர்கள் இரு நாட்டையும் உண்மையில் நன்கு அறிவார்கள்.
எனினும், அவர்கள் ஈரானை நன்கு அறிந்திருக்கலாம். என்ன நடக்கிறது என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். அவர் (முனிர்) என் கருத்துடன் உடன்படுகிறார். இந்தியா உடனான போரை தொடராமல் பாகிஸ்தான் அதை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக நன்றி சொல்வதற்காகத்தான் பாகிஸ்தான் இராணுவ தளபதி அசிம் முனிர் உடனான சந்திப்பு தற்போது நடந்துள்ளது.
போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், அது ஒரு அணுசக்தி போராக இருந்திருக்கலாம். இரண்டு நாடுகளும் பெரிய அணுசக்திகள். ஆனாலும் போரை நிறுத்த அவர்கள் முடிவு செய்தார்கள். இரண்டு புத்திசாலிகள் போரை தொடர வேண்டாம் என முடிவு செய்தார்கள். அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று ட்ரம்ப் கூறினார். (a)
21 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago
43 minute ago