Editorial / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நேற்று முன்தினம் (21) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து, இந்தியா - இலங்கைக் கடலோர எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, காரைக்கால், தூத்துக்குடி, மண்டபம் பகுதிகளிலுள்ள இந்தியக் கடலோரக் காவல்படையினர், இந்தியா - இலங்கை இடையேயான சர்வதேச கடற்பரப்பைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
காரைக்கால் கடலோரக் காவல் படையினர், நாகப்பட்டினம் வரையிலும் மண்டபம் கடலோரக் காவல்படையினர் பாக் நீரினைப் பகுதியிலும், தூத்துக்குடி கடலோர காவல்படையினர் மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும், ஹோவர் கிராஃப்ட் கப்பல், ஆயுதம் தாங்கிய ரோந்துக் கப்பல்கள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், சென்னைக் கடலோர காவல்படை மையத்திலிருந்து, டோனியர் ரக விமானங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர, தமிழகக் கடலோரக் காவல் குழுமப் பொலிஸாரும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஓலைக்குடா, மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரத்துக்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனுஷ்கோடி பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago