Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து, 189 பேருடன் புறப்பட்ட விமானமொன்று, அந்நாட்டின் ஜாவா தீவுக்கு அருகில், கடலில் வீழ்ந்து நேற்று (29) மூழ்கியதில், அதில் பயணித்த அனைவருமே கொல்லப்பட்டனர் என அஞ்சப்படுகிறது. தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்த பின்னரே, அது இவ்வாறு கடலுக்குள் வீழ்ந்து மூழ்கியது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பின்னர், சில நிமிடங்களிலேயே, மீண்டும் தரையிறங்குவதற்கான அனுமதியை, விமானி கோரினாரெனத் தெரிவித்த அதிகாரிகள், அதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், அதன் பின்னர் தொடர்பு இழக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
விமானம் தொடர்பை இழந்த பகுதிக்கு அண்மையாக, சுமார் 30 தொடக்கம் 35 மீற்றர் ஆழத்தில், அலைபேசிகள், உயிர்காப்பு அங்கிகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விமானம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, படகுகள், ஹெலிகொப்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு, தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

என்ன காரணத்துக்காக இவ்விபத்து ஏற்பட்டது என்பதைத் தீர்மானிக்க முடியவில்லையெனத் தெரிவித்த அதிகாரிகள், விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, இதை உறுதிப்படுத்த முடியுமெனத் தெரிவித்தனர்.
இவ்விமானம், மிகவும் நவீனமானது எனத் தெரிவித்த அதிகாரிகள், பறந்துகொண்டிருக்கும் போதே, தரையிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தரவுகளை அனுப்பும் வசதியைக் கொண்டது எனத் தெரிவித்த அதிகாரிகள், அவ்வாறு அனுப்பப்பட்ட தரவுகளையும் ஆராயவுள்ளதாகத் தெரிவித்தனர். எனினும், கறுப்புப் பெட்டிகளை மீட்பது தான் இலகுவான முடிவெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, விமானம் புறப்பட்டு இரண்டு நிமிடங்களில், வெறுமனே 2,000 அடிகள் மாத்திரமே அது உயர்ந்திருந்ததோடு, அதன் பின்னர் 500 அடிகள் தொழிறங்கி, இடதுபக்கமாகச் சென்று, பின்னர் 5,000 அடிகள் உயரத்தை அடைந்தது எனவும், அதன் பின்னர், அதே உயரத்திலேயே காணப்பட்டது எனவும் தெரிவித்தனர். விமானத்துடனான தொடர்பு இழக்கப்படும் போது, 3,650 அடிகள் உயரத்திலேயே, அது காணப்பட்டுள்ளது.
44 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
4 hours ago