Freelancer / 2023 ஜூலை 30 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளம்பரத்தில் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதியை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் அளிக்கும் புதிய திட்டத்தை எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து, அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அவ்வாறு அண்மையில் ட்விட்டருக்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்து அதன் லோகோவையும் மாற்றினார்
புதிய உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு பணத்தை நேரடியாக அளிக்கும் முறையை எக்ஸ் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனிடையே வீடியோக்களுக்கு நடுவே வரும் விளம்பரத்தை மக்கள் பார்க்கும்போது கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கும் பகிரும் வசதியை அறிவித்துள்ளது.
விளம்பர வருவாய் பகிரும் திட்டத்தில் பணம் பெற வேண்டுமானால் ஒருவரின் கணக்கு சரிபார்த்திருக்க வேண்டும் என்றும் கடந்த 3 மாதங்களில் ஒன்றரை கோடி பதிவுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எக்ஸ் அறிவித்துள்ளது.
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago