Editorial / 2025 டிசெம்பர் 11 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொராக்கோவின் ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இரண்டு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இடிந்து விழுந்த இரண்டு கட்டடங்களில் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .