2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இராணுவம் - துணை இராணுவம் மோதல்: 150 படையினர் பலி

Freelancer   / 2024 நவம்பர் 19 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடான் நாட்டின் தலைநகர் தெற்கு டார்ப் மாகாணம்,  அல் பஷீர் நகரில், திங்கட்கிழமை (18), இராணுவத்திற்கும் துணை இராணுவத்தின் அதிவிரைவுப்படையினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கி சண்டை  மோதலில், துணை இராணுவத்தின் அதிவிரைவுப்படையினர் 150 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு, சூடான் நாட்டின்  ஆட்சியை, இராணுவம் கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயற்பட்டு வருகிறார். 

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயற்பட்டு வருகிறார்.

இதனிடையே, துணை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை இராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி முதல் கடும் மோதல் தொடர்ந்த வண்ணமுள்ளது. 

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X