2025 நவம்பர் 05, புதன்கிழமை

இராமாயண கதாகாலட்சேபத்தில் பந்தல் சரிந்து பலர் பலி

Editorial   / 2019 ஜூன் 24 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டத்தில், நேற்று (23) மாலை, பந்தல் சரிந்து விழுந்து, 17 பேர் உயரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்துக்குட்பட்ட ஜசோல் கிராமத்திலுள்ள பாடசாலை​யில், நேற்று இன்று ராமாயண கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, 300க்கும் அதிகமானவர்கள் கண்டுகளித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள் அமர்வதற்காக, இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய பந்தலின் ஒருபகுதி, திடீரென்று சரிந்து வீழுந்துள்ளது.

இதில் 17 பேர் உயிரிழந்ததோடு. 70க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அருகிலுள்ள​ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில், 45 பேர், கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பந்தலில் கட்டப்பட்டிருந்த மின்சார வயர்கள் அறுந்து மக்கள் மீது விழுந்தபோது, மின்சார் தாக்கி பலர் உயரிழந்தனர் என்று, சம்பவத்தை நேரில் கண்டவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X