2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து தொழிலாளர்களை அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஹோட்டல் துறையில் NVQ தரம் 3 சான்றிதழ் பெற்ற இளைஞர்களுக்கு இதற்கான வாய்ப்பு கிடைக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இஸ்ரேலில் விவசாய துறையில் 2,252 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X