Editorial / 2019 ஜூலை 01 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவில், இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் ஒன்பது பேரும், மூன்று சிறுவர்கள் உள்ளடங்கலாக ஆறு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் இன்று (01) தெரிவித்துள்ளது.
சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு அருகில், ஹொம்ஸ் மாகாணத்தில் நேற்று முன்தினமிரவு நடாத்தப்பட்ட தாக்குதல்களில் போராளிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், தாக்குதலின்போதா அல்லது அதன்பின்னரா எவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது உடனடியாகத் தெளிவில்லாமலுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
இந்நிலையில், டமஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள சில ஈரானிய நிலைகள், லெபனானியா ஷியாக் குழுவான ஹிஸ்புல்லா, ஈரான் தரையிறக்கப்பட்டுள்ள ஹொம்ஸ் நகரத்துக்கு மேற்காகவுள்ள ஆராய்ச்சி நிலையமொன்று, இராணுவ விமானநிலையத்தை தாக்குதல்கள் இலக்கு வைத்ததாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொல்லப்பட்ட சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகளிலொருவர் சிரியர் எனவும் ஏனையவர்கள் வேறு நாட்டு பிரஜாவுரிமைகளைக் கொண்டவர்கள் என மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் கூறியுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலியத் தாக்குதலொன்றுக்கு தமது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் பதிலளித்த பின்னர் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னதாக சிரிய அரச செய்தி முகவரகமான சனா தெரிவித்திருந்தது.
எவ்வாறெனினும், குறித்த அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளரொருவர் மறுத்துவிட்டார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago