2025 நவம்பர் 05, புதன்கிழமை

இஸ்ரேலும் காஸாவும் யுத்தநிறுத்தத்துக்கு இணக்கம்

Editorial   / 2019 மே 07 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்தது 25 பலஸ்தீனர்களும், நான்கு இஸ்ரேலியர்களின் இறப்புக்கு வழிவகுத்த, காஸா, தென் இஸ்ரேலில் அதிகரித்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தமொன்று இணங்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நேரப்படி நேற்றுக் காலை ஏழு மணிக்கு ஒப்பந்தமொன்று இணங்கப்பட்டதாகவும், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் காஸா மீது இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை என காஸா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இஸ்ரேல், காஸாவுக்கிடையேயான நாட் கணக்கான தாக்குதல்களை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் எகிப்தும், கட்டாரும் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், இஸ்ரேலிடமிருந்து எவ்விதமான உறுதிப்பாடும் இல்லாதபோதும், காஸா எல்லைக்கருகே கடந்த வாரயிறுதி தாக்குதல்களின்போது விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நேற்று அதிகாலை இஸ்ரேலிய இராணுவம் நீக்கியிருந்தது.

இந்நிலையில், காஸா மீதான தனது தடையை இஸ்ரேல் தளர்த்துவதை யுத்தநிறுத்த ஒப்பந்தம் அடிப்படையாகக் கொண்டது என தன்னை அடையாளங்காட்ட விரும்பாத காஸாவிலுள்ள இஸ்லாமிய ஜிஹாத் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மீன்பிடிக்கும் வலயத்தை, காஸாக் கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்கு தளர்த்துவது, காஸாவின்மின், எரிபொருள் நிலையில் மேம்படுத்தல்கள் போன்ற படிகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தன்னைய அடையாளங் காட்ட விரும்பாத எகிப்திய அதிகாரியொருவரும் குறித்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், காஸா மீது பாரிய தாக்குதல்களுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஹமாஸ் தளபதி ஹமாட் அல்-கொடோரி நேற்று முன்தினம் கொல்லப்பட்டிருந்தார். இத்தாக்குதலை இலக்கு வைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் வர்ணித்த நிலையில், ஈரானிலிருந்து காஸாவிலுள்ள ஆயுதக் குழுக்களுக்கு பாரியளவு பணத்தை அவர் பரிமாறிக் கொண்டிருந்ததாக இராணுவ அறிக்கையொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X