Editorial / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, நீண்ட கால வழமைக்கு மாறாக முன்னாள் இராணுவத் தளபதி பென்னி கன்ட்ஸுக்கு நேற்று அரேபிய அரசியல் கட்சிகள் ஆதரவளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அடுத்த அரசாங்கத்தை அமைக்குமாறு கோருவதிலிருந்து இஸ்ரேல் ஜனாதிபதி றூவன் லிவ்வினைத் தடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளனர்.
120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்களை பிரதான அரேபிய இணைந்த வரிசைக் கூட்டணி வென்று மூன்றாவது மிகப்பெரிய அணியாக உருவெடுத்துள்ள நிலையிலேயே மேற்குறித்த நகர்வு வந்துள்ளது.
இந்நிலையில், தமது முடிவை அறிவிக்கும்போது கூட்டணியின் முடிவானது பென்னி கன்ட்ஸின் கொள்கைகளின் அனுசரிப்பல்ல எனத் தெரிவித்த இணைந்த வரிசையின் தலைவர் அய்மன் ஒடெஹ், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அகற்றுவதற்கான நகர்வு எனக் கூறியுள்ளார்.
அந்தவகையில், பலஸ்தீனர்களுடன் ஒஸ்லோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்த 1992ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளரான யிட்ஸ்ஹக் றபினை பெரும்பான்மையான அரேபியக் கட்சிகள் ஆதரித்த பின்னர் பிரதமர் வேட்பாளரொருவரை பெரும்பான்மையான அரேபியக் கட்சிகள் ஆதரிப்பது இதுவே முதற்தடவையாகும்.
இஸ்ரேலின் அரேபியக் குடித்தொகையை நோக்கி இனவெறியைக் காண்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரிக் கொள்கைகளையுடைய லிகுட் கட்சி, பென்னி கன்ட்ஸின் இடதுசாரிக் கொள்கைகளுக்கும் வலதுசாரிக் கொள்கைகளுக்கும் இடையேயான கொள்கைகளைக் கொண்ட நீலம் மற்றும் வெள்ளைக் கட்சியும் அடுத்த கூட்டணியில் இடம்பெறவேண்டும் எனத் தான் நம்புவதாக றூவன் லிவ்வின் தெரிவித்திருந்தார்.
நீலம் மற்றும் வெள்ளைக் கட்சி 33 ஆசனங்களையும், லிக்குட் கட்சி 31 ஆசனங்களையும் வென்றுள்ளன. பென்னி கன்ட்ஸ் 57 பேரின் ஆதரவையும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 55 பேரின் ஆதரவையும் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் எட்டு ஆசனங்களை வென்ற முன்னாள் பாதுகாப்பமைச்சர் அவிக்டொர் லிபர்மன்னின் யிஸ்ரேல் பெய்டெனு கட்சி உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
04 Nov 2025