2025 மே 05, திங்கட்கிழமை

இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கு அமெரிக்கா உதவி

Freelancer   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கு, அமெரிக்க இராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காசாவுக்கு எதிரான போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் ராக்கெட் தாக்குதலில் இருந்து கூட்டணி நாடான இஸ்ரேலை பாதுகாப்பதற்கு உதவும் வகையில்,, அதிக உயரத்தில் ராக்கெட்டுகளை அழிக்கும்திறன் பெற்ற நவீன சாதனம் ஒன்றை அமெரிக்கா வழங்கவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின் இதனை வழங்கவுள்ளார்.

இதேபோன்று, இஸ்ரேல் வான்பாதுகாப்பை ஊக்குவிக்க உதவியாக அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X