Freelancer / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை, எகிப்து பரிந்துரை செய்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, எகிப்து மத்தியஸ்தரகாக செயற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் ஒரு வாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன்போது, 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. தற்போது வரை சுமார் 100 பிணைக்கைதிகள் ஹமாஸிடம் உள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நான்கு பிணைக்கைதிகைள திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து பரிந்துரை செய்துள்ளது.
இந்த நான்கு பிணைக்கைதிகளை திரும்பப் பெற இரண்டு நாட்கள் போர் நிறுத்தத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
குறித்த நான்கு பிணைக்கைதிகளுக்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இரு தரப்பிலும் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், அந்த நான்கு பிணைக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள்.
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago