Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எபோலாவைத் தடுக்க அல்லலாடும் கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசின் பெனி பகுதியில் இரண்டு தாக்குதல்களில் 12 பேரை இஸ்லாமியப் போராளிகள் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
எபோலா பரவலின் மய்யமாவுள்ள பெனியிலுள்ள எரின்கெடி, ஒய்சா நகரங்களை ஒரே நேரத்தில் கூட்டணி ஜனநாயகப் படைகளின் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் போராளிகள் கடந்த திங்கட்கிழமை தாக்கியதாக பெனி பிராந்திய நிர்வாகி கஸெரெகா டொனாட் கூறியுள்ளார்.
எரின்கெடியின் ஒன்பது பேரையும், ஒய்சாவில் மூன்று பேரையும் போராளிகள் கொன்றதாக கஸெரெகா டொனாட் தெரிவித்துள்ளநிலையில், பெனியைத் தளமாகக் கொண்ட உள்ளூர் சிவில் பாதுகாப்பு அதிகாரியொருவரான ஜன்வியர் கஷிரியோவும் குறித்த எண்ணிக்கைனோர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் கொங்கோலிய இராணுவப் படைகளின் பலத்த பிரச்சன்னமுள்ளபோதும் இத்தாக்குதல்களால் முழுமையான அச்சத்தில் அங்குள்ளோர் இருப்பதாக கஸெரெகா டொனாட் கூறியுள்ளார்.
கடந்த மாதத்திலிருந்து கூட்டணி ஜனநாயகப் படைகளால் நடாத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு உரிமை கோருகின்றபோதும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கு ஒருபோதும் கூட்டணி ஜனநாயகப் படைகள் ஆதரவளிக்கவில்லை. கூட்டணி ஜனநாயகப் படைகளின் தாக்கமுள்ள பகுதிகளை தமது மத்திய ஆபிரிக்க மாகாணமாக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு வர்ணித்துள்ளது.
கூட்டணி ஜனநாயகப் படைகளின் பிரசன்னத்தோடு, ஏனைய வன்முறை ஆயுதக் குழுக்கள், ஆயுதந்தரித்த குற்றவியல் குழுக்கள் காரணமாக உலகிலேயே இரண்டாவது மோசமான எபோலா தொற்றுக்குள்ளான கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசைக் கட்டுப்படுத்துவது கடினமாகவுள்ளது.
எபோலா 1,700க்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ள நிலையில், சர்வதேச சுகாதார அவசரநிலையொன்றை கடந்த வாரம் உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியிருந்தது.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago